×

உத்தரப் பிரதேசத்தில் 75,000 பயணாளிகளுக்கு வீடுகளை வழங்கினார் பிரதமர் மோடி : ஃபேம் –II திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார்!!

லக்னோ  ‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்தீப் பூரி, மகேந்திரநாத் பாண்டே, கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.உத்திரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி (பிஎம்ஏஒய்-யு) திட்டத்தின்கீழ் 75,000 பயணாளிகளுக்கு இணையவழி நிகழ்ச்சியில் பிரதமர் சாவிகளை ஒப்படைத்தார். பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் அம்ருத் திட்டத்தின்கீழ் உத்திரப்பிரதேசத்தில் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார் / அடிக்கல் நாட்டினார்: லக்னோ, கான்பூர், வாரணாசி, ப்ரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி, காஜியாபாத் ஆகிய ஏழு நகரங்களுக்கு ஃபேம் –II திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார்: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு முக்கிய இயக்கங்களின் கீழ் அமலாக்கப்பட்ட 75 திட்டங்களை உள்ளடக்கிய காஃபி மேசை புத்தகத்தை அவர் வெளியிட்டார். லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைப்பது பற்றியும் பிரதமர்  அறிவித்தார்….

The post உத்தரப் பிரதேசத்தில் 75,000 பயணாளிகளுக்கு வீடுகளை வழங்கினார் பிரதமர் மோடி : ஃபேம் –II திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Uttar Pradesh ,Lucknow ,Assadi ,Urban ,India ,Urban Map' Seminar and Exhibition ,Dinakaran ,
× RELATED எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி...